தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகள்
பகுத்தறிவு இணைய வானொலி
தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகள்
பகுத்தறிவு இணைய வானொலி
தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களின் அபரிமிதமான திறமைகளை உலகிற்கு பறைசாற்றும் ஒரு தனித்துவமான முன்னெடுப்பே இந்த இணைய வானொலி. இது வெறும் பொழுதுபோக்கு தளம் மட்டுமல்ல; வருங்கால ஊடகவியலாளர்களை உருவாக்கும் ஒரு நவீனப் பயிலரங்கம். பள்ளி மாணவர்களால், மாணவர்களுக்கும் மக்களுக்காகவும் நடத்தப்படும் இவ்வானொலியில் ஒலிபரப்பப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களாலேயே திட்டமிடப்பட்டு, உரை எழுதப்பட்டு, தொழில்நுட்ப ரீதியாகத் தயாரிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பு, ஒலிப்பதிவு மற்றும் செய்தி வாசிப்பு போன்ற துறைகளில் நேரடிப் பயிற்சி அளிப்பதையும், அவர்களின் பேச்சுத்திறன் மற்றும் படைப்பாற்றலை வளர்த்து அவர்களைத் துணிச்சலான ஆளுமைகளாக மாற்றுவதையும் முதன்மை நோக்கமாக கொண்டுள்ள இவ்வானொலியானது மாணவர்களின் கற்பனையில் உருவான கதைகள், சமூக விழிப்புணர்வு உரையாடல்கள் மற்றும் சாதனையாளர்களின் நேர்காணல்கள் எனப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் வாய்ப்பு கிடைத்தால் வானத்தையே எட்டுவார்கள் என்பதற்கு இந்நிகழ்ச்சிகளே சான்று. எங்களது ஒவ்வொரு ஒலிபரப்பிற்கு பின்னாலும் ஒரு மாணவனின் பெரிய கனவு ஒளிந்திருக்கிறது. நம் மாணவர்களின் குரலுக்கு செவிசாய்த்து, அவர்களின் திறமையை ஊக்கப்படுத்த எங்களது பகுத்தறிவு இணைய வானொலியைத் தொடர்ந்து கேளுங்கள்.
📍 பகுத்தறிவு இணைய வானொலி நிலையம்
தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகள், நுங்கம்பாக்கம், சென்னை - 600006.
📞 +91 7871663230 | 📧 communityradiomastertrainer@tnschools.gov.in